உள்நாடு

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு

(UTV | கொழும்பு) – ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக காயமடைந்த 33 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 13 பொதுமக்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மிஹிரி பிரியங்கனி உறுதிப்படுத்தினார்.

சம்பவத்தில் காயமடைந்த 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று காலை கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 14 பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

Related posts

உலக முடிவில் மண்சரிவு!

கோப் குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம்

ஆபாசப் பேச்சுக்களை தடை செய்தல் தொடர்பான சட்டமூலம்