(UTV | கொழும்பு) – போராடும் இளைஞர்களின் குரலுக்கு நாம் அனைவரும் செவிசாய்க்க வேண்டும். கடந்த காலங்களை போன்று இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்கவில்லை, மாறாக அமைதியான முறையில் போராடுகின்றனர். ஆகவே அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள் என நாடாளுமன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
மேலும், அவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக முன்வருகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை அவர்கள் சுபீட்சமாக்கிக் ஆக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். எமது காலம் முடிந்து விட்டது. இனி அவர்களுக்கான காலம் எனத் தெரிவித்திருந்தார்.