உள்நாடு

‘பொடி மெனிகே’ தடம்புரண்டதில் மலையக ரயில் சேவைகளில் தாமதம்

(UTV | கொழும்பு) – இன்று (18) காலை 8.30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து 1.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுரங்கத்திற்கு அருகில் காலை 8.40 மணியளவில் புகையிரதம் தடம் புரண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அப்போது புகையிரதத்தில் ஏராளமான பயணிகள் இருந்ததாகவும், அவர்களை மீண்டும் பதுளை புகையிரதம் நிலையத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பில் இன்று நீர் வெட்டு

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு

தங்கம் மற்றும் டொலரின் இன்றைய நிலவரம் இன்றைய நிலவரம்