உள்நாடு

‘விரட்டியடிப்போம்’ : இரண்டாவது நாளாக இன்று

(UTV | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ‘விரட்டியடிப்போம்’ (‘பன்னமு’) என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் மூன்று நாள் எதிர்ப்பு ஊர்வலம் இன்று வாதுவையில் இருந்து மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

பேருவளையில் இருந்து நேற்று காலை பேரணி ஆரம்பமானது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாதுவையில் இருந்து மொரட்டுவைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று பேரணியாக செல்லவுள்ளனர்.

இந்தக் குழு மொரட்டுவையில் இருந்து காலி முகத்திடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போராட்டத் தளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

Related posts

தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி பணிப்பு

மேலுமொரு கட்டண உயர்வு

‘IMF இன் இசைக்கு நடனமாடும் அரசு’ – தேசிய மக்கள் சக்தி