கிசு கிசு

பிரதமரை இராஜினாமா செய்ய வேண்டாம் என கடும் அழுத்தம்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார்.

இன்று இரவு 7 மணிக்கு இந்த விசேட உரைவெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கவுள்ளார்.

நாடு நெருக்கடியான நிலையில் உள்ளதால், ஆளும் கட்சியினர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என்றும், தொடர்ந்தும் பதவியில் இருக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமரிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிய வருகின்றது.

Related posts

ஆபாச கோணத்தில் படமெடுப்பது தண்டனைக்குரிய குற்றம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆகாய டாக்ஸிகள் அறிமுகம்?

பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி நிதியுதவி?