உள்நாடு

பிரதி சபாநாயகாரின் இராஜினாமா ஜனாதிபதியால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகர் நேற்று (05) ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவி சுயாதீனமான பதவி என்பதனால் தற்போதைக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்வது அத்தியாவசியமானது எனவும் அதற்கமைய தனது பதவி விலகல் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததையடுத்து, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த வருடம் மட்டும் 85.4 பில்லியன் நட்டம்

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம்