(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிக்கையில்; ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவைக் கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்த்த முதல் நபர் தாம் என்று கூறினார்.
“அவரது பெயர் முன்மொழியப்பட்டபோது, நான் அதை எதிர்த்தேன், மேலும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு கட்சியில் மூத்தவர்களை பரிசீலிக்க பரிந்துரைத்தேன்
எனினும், மஹிந்த ராஜபக்ஷ அதற்கு செவிசாய்க்கவில்லை, குடும்ப உறுப்பினரை நியமிக்க விரும்பினார், எனவே கோட்டாபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தவறான முடிவை எடுத்தார். மஹிந்த (ராஜபக்ஷ) தவறான முடிவை எடுத்ததால், இன்று முழு நாடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு கூற வேண்டும்..” என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.