உள்நாடு

உண்மையிலேயே அமைச்சர்கள் இராஜினாமா செய்தார்களா? – கம்மன்பிலவுக்கு சந்தேகம்

(UTV | கொழும்பு) – இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையில் அமைச்சரவை நேற்று இராஜினாமா செய்ததா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில, இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்கள் தமது இராஜினாமாக்களை அரச தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்ட இராஜினாமா செல்லாது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அமைச்சர்கள் இராஜினாமா செய்யும் முடிவை எடுத்தது பொதுமக்களின் போராட்டத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றார்.

பொது ஆணையை இழந்ததன் பின்னர் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நம்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இடைக்கால சர்வகட்சி அரசாங்கமே காலத்தின் தேவை என எம்.பி. இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுமக்கள் மீது அக்கறையுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

கடூழிய சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் மனு தாக்கல்

editor

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

இலங்கைக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான்

editor