உள்நாடு

மிரிஹான போராட்டத்தில் நடந்த மீறல்கள் குறித்து விசாரணை : மனித உரிமை ஆணைக்குழு

(UTV | கொழும்பு) – மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.

செவ்வாய்கிழமை பேச்சுக்கள் அரசாங்கம் அல்லது வேறு எந்த தரப்பினராலும் சாத்தியமான மனித உரிமை மீறல்கள் குறித்து எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தும்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாத்தியமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு தரப்பினராலும் முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணைகளை ஆரம்பிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மிரிஹானவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம்

இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றுக்கு