உள்நாடு

கப்ரால் இன்று அரசாங்க நிதி பற்றிய ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார் என அந்தக் குழுவின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷண யாபா தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமகால பொருளாதார நிலை குறித்து வினவுவதற்காக, மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர், அதன் உயர் அதிகாரிகள், நிதிச் சபையின் உறுப்பினர்கள், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் கடந்த 24ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் அதில் பங்கேற்காமை குறித்து குழுவின் தலைவர் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

நுவன் சொய்சாவிற்கு ஐசிசி இனால்6 வருட கால தடை