கிசு கிசு

இலங்கை மின்சார சபை கடும் நிதி நெருக்கடியில்

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிதி நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு வந்த நிதி வசதிகள் வங்கிகளால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் (CEB) பதில் பொது முகாமையாளர் டி.சி.ஆர். அபேசேகர சபையின் அனைத்து பிரிவுகளின் தலைவர்களுக்கும் 29ஆம் திகதி அறிவித்துள்ளார்.

ஏப்ரல் முதல் வாரத்திற்குள் மீண்டும் மாதாந்த சம்பளம் வழங்கப்பட உள்ளதால், கொடுப்பனவுகளை நிர்வகிக்குமாறு பொது மேலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, சம்பளத்திற்கு மேலதிகமாக அடுத்த சில வாரங்களில் நிலக்கரிக்காக 32 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. எனவே, இலங்கை மின்சார சபையின் ஒவ்வொரு பிரிவிற்கும் நேற்று (30ஆம் திகதி) முதல் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 15 மில்லியன் ரூபா காசோலைகளாக வழங்கப்பட வேண்டும். இலங்கை மின்சார சபை 38 பில்லியன் ரூபாவை மின்சார பாவனையாளர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதில் பாதி தொகையையாவது வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும் பொது மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு கொடுப்பனவுகள் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் பதினாறு வழிகளையும் பொது முகாமையாளர் பிரிவுகளின் தலைவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் படத்திலிருந்து விலகினாரா?

ரஞ்சனின் இடைவெளிக்கு விஜயமுனி

YouTube நிறுவனத்திற்கு 200 மில்லியன் அபராதம்