உள்நாடு

இன்றும் 13 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம் 13 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F ஆகிய வலயங்களில் இன்று (31) அதிகாலை 3 முதல் 6 மணி வரை 3 மணித்தியாலங்களும், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 6 மணித்தியாலங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 3 மணித்தியாலங்களும், காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணித்தியாலங்களும், மின்வெட்டு அமுலாகவுள்ளது.

அவ்வாறே, P,Q,R,S ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணிமுதல் காலை 6 மணிவரை 3 மணித்தியாலங்களும், நண்பகல் 12 முதல் மாலை 4 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை 6 மணித்தியாலங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

T,U,V,W ஆகிய வலயங்களுக்கு நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை 3 மணித்தியாலங்களும், காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணித்தியாலங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 முதல் காலை 9 மணி வரை 3 மணி நேரமும் 30 நிமிடங்களும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணித்தியாலங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு அட்டவணை

Related posts

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்