உள்நாடு

கையிருப்பில் டீசல் இல்லை – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிய வேண்டாம்

(UTV | கொழும்பு) – டீசலை பெற்றுக்கொள்வதற்காக இன்றும் நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை சுற்றி ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிச் செல்லும் கப்பல் இலங்கைக்கு வந்துள்ள போதிலும், திட்டமிட்டபடி இறக்க முடியவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு டீசல் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், பெட்ரோல் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

எரிபொருள் நெருக்கடியை தீர்க்க மலேசியா உதவி

தங்கம் மற்றும் நாணய விலை குறித்த தகவல்

சம்மாந்துறை க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!