(UTV | கொழும்பு) – ரயில் கட்டணத்தை மாற்றியமைக்க அமைச்சரவை நேற்று (28) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி நாளை (30) முதல் அதிகரிக்கப்பட்ட புதிய கட்டணத்தின் கீழ் ரயில்கள் இயங்கும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முதல் கிலோமீட்டருக்கு முதல் வகுப்பு டிக்கெட் விலை ரூ.1.30 என்றும், புதிய விலை திருத்தத்தின் கீழ் ரூ. 2.00 ஆக உயர்த்தப்படும்.
சதவீதம் அதிகரிப்பு சற்று அதிகமாக இருந்த போதிலும், நீண்ட காலமாக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ரயில்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான கட்டணத்தை கூட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில் சேவையை இதுவரையில் சுமார் 4 பில்லியன் ரூபாய் நஷ்டத்திலேயே நடாத்தி வந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.