(UTV | இஸ்ரேல்) – சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நப்தாலி பென்னட் நலமுடன் உள்ளார். அவர் வீட்டிலிருந்தே வேலைகளை தொடருவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.