உள்நாடு

இலங்கைக்கும் – மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இன்று (28) முதல் இடைநிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

கட்டுப்பாடற்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நிலைமை மீண்டு வந்தவுடன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என நம்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பிற்கும் மாஸ்கோவிற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

அரசியல் பழிவாங்கலிற்குள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு

கொள்கை வட்டி வீதம் தொடர்பிலான தீர்மானம்