(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி அவர் குறித்த குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.