விளையாட்டு

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி அட்டவணை

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் 3 இருபதுக்கு 20 தொடர், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் அவுஸ்திரேலிய ஆடவர் அணி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி ஜூன் 07 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்திலும் 2ஆவது போட்டி ஜூன் 8 ஆம் திகதி அதே மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது இருபதுக்கு 20 போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த 2 போட்டிகளும் முறையே ஜூன் 14ஆம் மற்றும் 16ஆம் ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

Related posts

தேர்வுக் குழுவினால் தலைமையில் மாற்றம்?

ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் மோதிய சென்னைக்கு திரில் வெற்றி…

அக்சர் படேலுக்கு கொரோனா