உள்நாடுகிசு கிசு

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்

(UTV | கொழும்பு) – இறக்குமதி பால்மாவின் விலை அதிகரிப்புக்கு அமைவான, புதிய விலை, நாளைய தினம் அறிவிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இறக்குமதி பால்மா கிலோ ஒன்றின் விலை, 500 அல்லது 600 ரூபாவினாலும், 400 கிராம் பால் மா விலை 260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதியில் திடீர் மாற்றம் ஆகியவற்றினை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதியாகும் பால்மா கிலோ ஒன்றுக்கான விலை 600 ரூபாவினால் அதிகரிக்குமாயின் புதிய விலை ரூ.1345 இலிருந்து ரூ.1945 ஆகவும், 400 கிராம் பால்மா பக்கட் 260 ரூபாவினால் அதிகரிக்குமாயின் ரூ.540 இலிருந்து ரூ.800 ஆகவும், அதிகரிக்கப்படவுள்ளது.

 

  • ஆர்.ரிஷ்மா

Related posts

நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை

அரசு ஜனநாயக உரிமைகளை இரத்து செய்து வர்த்தமானியை வெளியிட்டுள்ளது

நான் கடுமையாக பிரம்பை எடுக்க வேண்டி வரும் – ரவூப் ஹக்கீம்

editor