(UTV | கொழும்பு) – நாட்டிற்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது.
IMF செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் (Gerry Rice) இது தொடர்பில் தெரிவிக்கையில்;
“அதிகாரிகள் IMF-ஆதரவு திட்டத்தை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர், மேலும் ஏப்ரல் மாதம் வாஷிங்டனுக்கு நிதியமைச்சரின் விஜயத்தின் போது இலங்கைக்கு எவ்வாறு சிறந்த முறையில் உதவுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுவோம்..”
புதன்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேசிய உரையில், வாரத்தின் முற்பகுதியில் IMF அதிகாரிகளை கொழும்பில் சந்தித்த பின்னர், IMF திட்டத்திற்கான அனுமதியை வழங்கியதாக அறிவித்தார்.
அந்நிய செலாவணி பற்றாக்குறையை உருவாக்கும் பணப்புழக்க ஊசிகளை நிறுத்த கடுமையான பணவியல் கொள்கைக்கு IMF ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரத்தை ஆராய்ந்துள்ளது, இது வருடாந்த 4வது பிரிவு ஆலோசனைகளைத் தொடர்ந்து குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக பணியாளர் அறிக்கையில் உள்ளது.
முழு அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்படவில்லை, ஆனால் முக்கிய முடிவுகளில், பண ஸ்திரமின்மையை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பொருளாதாரம் வெடிக்கும் என்ற எச்சரிக்கைகள் அடங்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ், பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கான அவசரத் தேவையை எடுத்துரைத்துள்ளார்.
- ஆர்.ரிஷ்மா