(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களில், காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.