உள்நாடு

ரயில் கட்டண அதிகரிப்பிற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – புகையிரத கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போன்ற பல்வேறு நாடுகள் உலகளாவிய ரீதியில் சிரமங்களை எதிர்நோக்கி வரும் வேளையில் இவ்வாறான புகையிரதக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திணைக்களத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் குறைபாடு காரணமாகவே ரயில்வே திணைக்களம் நட்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அசாதாரண மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் சட்டவிரோத மேலதிக நேர கொடுப்பனவுகள், நில குத்தகை முறையில் முறையற்ற வரிவிதிப்பு மற்றும் முறையான வரிவிதிப்பு போன்றவற்றின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல், பயணிகளின் மீது மேலும் சுமையை சுமத்துவதை ஏற்க முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கான யோசனையை ரயில்வே பொது முகாமையாளர் போக்குவரத்து அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான அனுமதி அமைச்சரினால் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

  • ஆர்.ரிஷ்மா

Related posts

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு

பெப்ரவரி 15 ஆம் திகதி வரை மின்சார கட்டண திருத்தம் அமுலில் இருக்கும்

பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் தம்பதி கைது