உள்நாடு

அரசுக்கு எதிரான SJB தலைமையில் இன்று கொழும்பில் மாபெரும் பேரணி

(UTV | கொழும்பு) –  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பேரணி இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இந்தப் பேரணி ஐக்கிய மக்கள் இயக்கத்தின் பேரணி மட்டுமல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் இதில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும் என க்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

தனியார் துறையின் குறைந்த சம்பளத்தை 25000 ரூபா வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்படும் – சஜித்

editor

பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்