(UTV | கொழும்பு) – சிபெட்கோ எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க முடியாததன் காரணமாக பாடசாலை போக்குவரத்து வாகனங்களது கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
குறைந்தபட்சம் 1000 ரூபாவாலும் அதிகபட்சம் 2000 ரூபாவாலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.