உள்நாடு

அரசாங்கத்துக்கு எதிரான நாளைய போராட்டத்துக்கு எதிர்க்கட்சி முஸ்தீபு

(UTV | கொழும்பு) – தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில்,

“.. பொது மக்களின் தற்போதைய பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதிலும், அடுத்த மாதத்துக்குள் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அரச தலைவருக்கு சவால் விடுப்பதிலுமே இந்த போராட்டம் கவனம் செலுத்தும்.

இலங்கையின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு நிபுணர்கள் குழுவை வரவழைக்குமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.

ஜனாதிபதி தனது தீர்மானங்களை பிரதிபலிப்பதும் இன்னும் பல சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியம்.
அவர்கள் திறமையான திட்டத்தை முன்வைத்தால், அரசாங்கத்துக்கு தனது ஆதரவை வழங்குவேன்..” என அவர் உறுதியளித்தார்.

Related posts

இன்றும் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சமையல் ஏரிவாயு விநியோகம் இன்று முதல் இடைநிறுத்தம்

‘எவர்கிவன்’ சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளது