(UTV | கொழும்பு) – நாளை (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.70 ஆகவும், கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நகர எல்லைக்குள் ரூ.55 ஆகவும் உயர்த்தப்படும்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக், பொருட்கள் மற்றும் சேவைகளின் திடீர் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி சாரதிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் முதல் கிலோமீட்டருக்கு ரூ.80 ஆகவும், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.60 ஆகவும் உயர்த்தப்படும் என்றார்.
எரிபொருள் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும், பொதுமக்களின் பயணத்திற்கு மேலதிகமாக ரூபா 10 மட்டுமே அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் விலை மாற்றம் அமுலுக்கு வரும் என ஜயருக் தெரிவித்தார்.