உள்நாடு

CEYPETCO எரிபொருள் விலையும் அதிகரிக்கும் : பசில்

(UTV | கொழும்பு) – லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினைப் போன்றே சிபெட்கோ நிறுவனமும் எதிர்காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்: “அமைச்சரே, எண்ணை விலையினையும் அதிகரித்து விட்டதே?

நிதி அமைச்சர்: “அது ஐஓசி நிறுவனம். ஏனையவையும் அதிகரிக்கலாம். உலகத்தில் எல்லாமே அதிகரித்து வருகின்றது.”

ஊடகவியலாளர்: “மக்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எண்ணெய் மட்டும் இல்ல. இதுக்கு தீர்வே இல்லையா?”

நிதி அமைச்சர்: “ஒன்று போக இன்னொன்று வருகின்றது. இப்போ உக்ரைன்-ரஷ்ய போர். நாங்கள் நிவாரணம் வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.”

சிலோன் ஐஓசி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

Related posts

இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor