உலகம்

ஜனாதிபதி தேர்தலில் நூலிழையில் வென்ற மக்கள் சக்தி கட்சி

(UTV |  சியோல்) – தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியா நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இத்தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

காலை 6 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இந்நிலையில், மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடும் போட்டியாக விளங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்றார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் கட்சியைச் சேர்ந்த யூன் சுக், தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

Related posts

சூடான் பிரதமர் பதவி இராஜினாமா

பைடனின் பதவியேற்புடன் பழிவாங்கல் தொடரும்

நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா