(UTV | வொஷிங்டன்) – உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.
உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும்படி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கேட்டு கொண்டார்.
இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.