(UTV | கொழும்பு) – அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக அதிகரிக்க இலங்கை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
நாளை நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இது தொடர்பில் தெளிவுபடுத்துவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.