உள்நாடு

“எதிர்வரும் மாத நடுவில் நாடு வழமைக்கு திரும்பும்”

(UTV | கொழும்பு) –  அடுத்த மாத இறுதியில் இருந்து நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொவிட் நிலைமையினால், இறுதிச் சடங்கில் உறவினர்களால் இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என்றும், நிலைமை ஓரளவு சரி செய்யப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

கலகெதரவில் நேற்று (6) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீட்டிலேயே கொவிட் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 150,000 ஐ தாண்டியுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தால், நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறந்த சேவையை வழங்க குறுஞ்செய்தி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 30 நிமிடங்களுக்குள் வாசகங்கள் அனுப்பப்படும் வகையில், திட்டத்தை முறையாக அமைத்ததை உலக சுகாதார நிறுவனம் (WHO) பெரிதும் பாராட்டுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஒரு வாரத்திற்கான எரிபொருள் கையிருப்பில் உள்ளது

எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

கொரோனா பலி எண்ணிக்கை 58