கிசு கிசு

மஹிந்தவின் தயவில் விமல், கம்மன்பிலவுக்கு தொடர்ந்தும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு

(UTV | கொழும்பு) –  நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுவாக இரண்டு மெய்க்காப்பாளர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். இதன்படி அண்மையில் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் அண்மையில் சந்தித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதானியிடம் விலைபோன முன்னணி ஊடகம்

‘நான் மக்களின் நண்பன்’ – ரணில்

இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ள செல்பி புகைப்படம்…