(UTV | கொழும்பு) – இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த திலும் அமுனுகம அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திஸாநாயக்கவும் கைத்தொழில் அமைச்சராக அமைச்சரவையில் இணைந்துகொண்டார்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களும் இந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலையடைந்துள்ளதாக லொஹான் ரத்வத்த தனது நெருங்கிய வட்டாரங்களுக்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பிரதமருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, பலர் வெளியேறிய போதும் தம்முடன் இருந்ததாகவும், அவரைப் பாதுகாத்ததாகவும் அமைச்சர் ரத்வத்தே மேலும் தெரிவித்துள்ளார்.