உள்நாடு

“எதிர்கால தேர்தல்களில் கூட்டணி இல்லை” – ஸ்ரீ.ல.சு.க

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கட்சி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியல் பீடத்திடம் பிரேரணை முன்வைக்கப்பட்டு கொள்கை முடிவு எடுக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Related posts

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!

பிக்கு பல்கலைக்கழகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில்

“அனுரவின் அலங்கார வார்த்தைகள் நமக்கு விமோசனம் தராது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

editor