(UTV | வொஷிங்டன்) – ரஷ்ய விமானங்கள் தனது வான்வெளியில் பயணிக்க அமெரிக்கா தடை செய்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியில் பயணிக்க உடன் அமுலாகும் விதத்தில் தடை விதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பாவும் கனடாவும் ஏற்கனவே ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளிக்குள் நுழைய தடை விதித்துள்ளன.
ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கான சில விமானங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.