உள்நாடு

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் நிலையில் பேரூந்துகள்

(UTV | கொழும்பு) – போதிய டீசல் கிடைக்காவிட்டால், தற்போது இயக்கப்படும் சில பேருந்துகள் இன்று மேலும் குறையும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இன்றைய தினத்திற்குள் டீசல் தேவை பூர்த்தி செய்யப்படும் என நம்புவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
டீசல் கிடைக்காவிட்டால் பல பேருந்துகள் இயங்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

டீசல் வழங்கும் போது பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Related posts

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

புதிதாக மேலும் 4 கொரோனா நோயாளிகள்

நிறுவன பிரதானிகள் கோரினால் பொதுப்போக்குவரத்து சேவை வழங்க தயார்