உள்நாடு

“இன்றைய இளைஞர்களுக்கு இறந்தகாலம் மறந்து விட்டது”

(UTV | கொழும்பு) –  மகாவலி ரன்பிம ஒரு இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வு எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் இன்று(26) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது அரசாங்கம் ஜனநாயக ரீதியில் நாட்டை ஆட்சி செய்யும் எனவும் மக்களின் சுதந்திரத்திற்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் கலாசாரத்திற்கு அமைவாக மக்கள் தமது உரிமைகளைப் பயன்படுத்த சுதந்திரம் வழங்கப்படும் எனவும், பலர் இந்த சுதந்திரத்தை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்துகின்றனர் எனவும் ஜனாதிபதி கூறினார்.

நீதிபதிகள் மீது கற்கள் வீசப்பட்ட காலங்கள், தேர்தல் வரைபடத்தை அகற்றிய காலங்கள், தேர்தல் முறைகேடுகள் உள்ளிட்ட கடந்த கால போராட்டங்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது என ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் வேட்டையாடப்பட்ட காலத்தையும், படையில் இருந்தவர்களின் குடும்பங்கள் கொல்லப்பட்டதையும் அவர் இங்கு நினைவு கூர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 3,380 பேர் பூரணமாக குணம்

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் வருவதில் தாமதமில்லை

ஊரடங்கு மேலும் நீடிப்பு