உள்நாடு

திரவ பால் கொள்முதலில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – திரவ பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பால் மற்றும் முட்டை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ தொழிற்சாலையை இன்று (25) காலை பார்வையிட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பால் பண்ணையாளரை மேம்படுத்துதல் மற்றும் திரவ பால் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Related posts

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க SLFP நிபந்தனை

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்.

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட பாதுகாப்பு!