உள்நாடு

2014 பின் முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $100 தாண்டியது

(UTV |  உக்ரைன்) –  உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி அளித்துள்ள நிலையில், அங்கு போர் நிலைமை மூண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், அப்பகுதியில் உள்ள உக்ரைன் துருப்புக்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு உடனடியாக சரணடையுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இல்லையெனில் ஏற்படும் இரத்த வெள்ளத்திற்கு உக்ரைனே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உக்ரைன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், அந்த நாட்டை யார் ஆட்சி செய்வது என்பதை உக்ரைன் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கிழக்கு உக்ரைன் மற்றும் தலைநகர் கியேவின் சில பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள், பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு, உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை முதல் முறையாக 100 டாலர்களை தாண்டியுள்ளது.

Related posts

தான் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது – ரவி கருணாநாயக்க

editor

கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

editor

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”