உள்நாடு

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நிதியமைச்சர் ஏன் மௌனம்?

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து இரண்டு மாதங்கள் நிதியமைச்சர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சி இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியால் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 115 டொலர்களாக உயரக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூன்று எரிபொருள் தாங்கிகளை விரைவில் விடுவிக்குமாறும் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவும் கருத்து வெளியிட்டார்.

கடந்த டிசெம்பர் மாதம் முதல் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நிதியமைச்சர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை என அவர் இதன்போது குற்றம் சுமத்தியிருந்தார்.

Related posts

ரிஷாதின் தடுப்புக்காவல் நியாயமானதா? – சபையில் எதிர்க்கட்சி கேள்வி

சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி உயிரிழப்பு

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன