உள்நாடு

மின்வெட்டுக்கான பரிந்துரைகள் ஆராய்வு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மாற்று நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நேற்று (16) மாலை மின்னஞ்சலூடாக கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது, நடைமுறை சாத்தியமற்றது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரோஹாந்த அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டிகளை செயலிழக்கச் செய்யுமாறும் தனியார் பிரிவுகளில் பிரத்தியேக மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துமாறும் அறிவிக்கும் பட்சத்தில் இந்த செயற்பாடுகளை கண்காணிப்பதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

கருணாவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ரூ.100,000 அபராதம்

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு