உள்நாடு

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகள்

(UTV | கொழும்பு) – அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவான 28% இன்று முதல் நாடளாவிய ரீதியாக உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

இதன்படி, சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 2022 ஆம் ஆண்டில் 65,000 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதுவரை ரூ.3,500 உதவித் தொகை பெற்ற குடும்பங்களுக்கு ரூ.4,500 உதவித் தொகையும், ரூ.2,500 உதவித்தொகை பெற்ற குடும்பங்களுக்கு ரூ.3,200 உதவித் தொகையும் வழங்கப்படும்.

1,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பங்களுக்கு 1,900 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவில் 28% அதிகரிப்பு இன்று முதல் சமுர்த்தி பயனாளிகளாக நாடளாவிய ரீதியிலாக 1.76 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Related posts

லேகியம் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது !

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி