உள்நாடு

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் திங்களன்று விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின் போது, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.

Related posts

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி