உள்நாடு

பசில் தலைமையில் முதல் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) –   உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு முதல் முறையாக இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கூடுகிறது.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மலேசிய முன்னாள் பிரதமருக்கு தண்டனைக் காலம் குறைப்பு!

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு