விளையாட்டு

டோனியின் சாதனையை முறியடிக்குமா ரோகித் சர்மா?

(UTV | அகமதாபாத்) – இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

ஒருநாள் போட்டியில் சொந்த மண்ணில் அதிக சிக்சர் எடுத்த இந்திய வீரர்களில் டோனியும், ரோகித் சர்மாவும் முதல் இடத்தில் உள்ளனர். இந்திய மண்ணில் டோனி 113 இன்னிங்சில் 116 சிக்சர்களும், ரோகித் சர்மா 67 இன்னிங்சில் 116 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் ஒரு சிக்சர் அடித்தால் டோனியின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முதல் இடத்தை பிடிப்பார். ஒட்டுமொத்த ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 245 சிக்சர் அடித்து இந்திய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். டோனி 229 சிக்சருடன் 2-வது இடத்தில் உள்ளார்.

சொந்த மண்ணில் அதிக சிக்சர் அடித்த சர்வதேச வீரர்களில் கிறிஸ்கெய்ல் முதல் இடத்தில் உள்ளார். அவர் 147 சிக்சர்கள் அடித்துள்ளார். கெய்லுக்கு அடுத்தபடியாக மார்டின் கப்தில் (நியூசிலாந்து) 130 சிக்சர்களும், பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) 126 சிக்சர்களும், மார்கன் (இங்கிலாந்து) 119 சிக்சர்களும் சொந்த மண்ணில் அடித்துள்ளனர்.

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 12-வது முறையாக தொடர் வெற்றி

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக லட்சுமணன்!

மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரரின் சகோதரர் கைது