விளையாட்டு

ஜூனியர் உலகக்கோப்பையில் சவால்களை கடந்து வெற்றி

(UTV |  ஆண்டிகுவா) – தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரும், ஜூனியர் அணிக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியுமாக செயல்பட்ட முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கூறுகையில்,

‘முதலில் ஜூனியர் அணியின் தேர்வு கமிட்டிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இது புதிய தேர்வு கமிட்டி. உறுப்பினர்களுக்கு சரியான வீரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்வது சவாலாக இருந்திருக்கும். அதன் பிறகு தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் மற்றும் உதவியாளர்கள் இந்த அணியை சீரிய முறையில் ஒருங்கிணைத்தனர்.

அதைத் தொடர்ந்து இந்திய இளம் வீரர்கள் கடினமாக உழைத்து ஆசிய கோப்பையை வென்றதுடன், உலக கோப்பைக்கும் நன்றாக தயாராகி இருந்தனர். ஆனால் போட்டியின் பாதியில் இந்திய வீரர்களுக்கு (6 பேர்) கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் நமது அணி அந்த சவால்களை கடந்து வெற்றியாக்கிய விதமும், நேர்மறையான அணுகுமுறையும் பாராட்டுக்குரியது.

கொரோனா எதிரொலியாக துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் 16, 19, 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் வீரர்களால் விளையாட முடியவில்லை. அதனால் தான் இந்த போட்டியில் வென்றதை சிறப்பு வாய்ந்ததாக நினைக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

இங்கிலாந்து வீரர் ராபின்சன் மீதான தடை விலக்கம்

தான் விளையாடும் இறுதி ஒருநாள் போட்டி இயலுமானால் வாருங்கள் – மலிங்க (video)

மாலிங்கவை மும்பை எடுக்காமைக்கான காரணம் இதுவே -மஹேலவின் கருத்து