உலகம்

அறிமுகமாகும் ‘பறக்கும் படகு’

(UTV |  துபாய்) – ஸ்விட்சர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ‘தி ஜெட்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சொகுசு படகாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் படகில் 8 முதல் 12 பேர் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் எரிசக்தியால் இயங்கும் இந்த படகின் வெள்ளோட்டம் விரைவில் துபாய் கடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த படகில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த படகு இயங்கும்போது சத்தம் வராது என்றும், தண்ணீருக்கு 80 செ.மீ உயரத்திற்கு மேல் இந்த படகு பறந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த படகு ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் புகை போன்ற உமிழ்வுகளை வெளியேறுவதில்லை. எனவே இந்த படகு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது என கூறப்படுகிறது.

இந்த படகு பயன்பாட்டுக்கு வந்தவுடன் மக்கள் பயணிக்க ஆர்வமாக உள்ளனர்.

Related posts

சர்வதேச ரீதியில் வஞ்சகமின்றி உயரும் கொரோனா

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில்