உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – 2021ம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இந்த பணிகள் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வழமையாக வருடத்தின் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் குறித்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடத்தில் பல முறை பிற்போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்த முறை இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 340, 508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 2,943 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை இடம்பெற்றிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அட்டாளைச்சேனை பிரதேச மக்களை – அச்சுறுத்திவரும் காட்டு யானைகள்!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம்!

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்