உள்நாடு

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 52 இலட்சத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,414 பேருக்கு பைஸர் செயலூக்கி (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய பைஸர் செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 5,200,047ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நேற்றைய தினம் 2,112 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,063 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

244 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 288 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகள் 650 பேர் சிகிச்சையில்

நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவு

வைத்தியர் முகைதீன் கொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை விதித்த நீதிபதி இளஞசெழியன்