(UTV | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள, சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நடவடிக்கை காரணமாக, இன்று(29) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை, சுதந்திர சதுக்க வளாக வீதிகளில், விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரையில், இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டம் இடம்பெறும் நாளன்று, கொழும்பு நகரிலும், சுதந்திர சதுக்க வளாகத்திலும், விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையாகும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளது.
எனவே, கொழும்புக்கு பிரவேசிப்பதற்கும், கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு, சாரதிகளிடம் பொலிசார் கோரியுள்ளது.